பொது மன்னிப்பு தாருங்கள்; வெலிகடையில் போராட்டம்! - sonakar.com

Post Top Ad

Friday, 25 June 2021

பொது மன்னிப்பு தாருங்கள்; வெலிகடையில் போராட்டம்!

 


சிறைக்கைதிகளுக்கு பாகுபாடு இன்றி மன்னிப்பை வழங்கி விடுவிக்க வேண்டும் எனக் கோரி வெலிகடை சிறைச்சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நிகழ்ந்துள்ளது.


கூரைப் பகுதியில் ஏறி, பதாதை ஏந்தி கைதிகள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, மஹர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டம் ஒன்றும் நடந்து வருகிறது.


துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டதையடுத்து பொது மன்னிப்பு எனும் விவகாரம் கேலிக் கூத்தாகியுள்ளதுடன் ஐ.நா - அமெரிக்கா இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment