கம்மன்பில அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என பெரமுன கடிதத் தலைப்பில் அறிக்கை வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் பல முனைகளில் நெருக்குதல்களை சந்தித்து வருகிறார்.
எரிவாயு விலையுயர்வு அறிவிப்பினையடுத்தே இவ்வாறு சாகர அறிக்கை வெளியிட்டிருந்த அதேவேளை, விலையுயர்வு தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒப்புதலுடனேயே மேற்கொள்ளப்பட்டமை தற்போது தெளிவடைந்துள்ள நிலையில், மஹிந்தானந்த அளுத்கமகே, அருந்திக பெர்னான்டோ உட்பட்ட முக்கியஸ்தர்கள் கம்மன்பிலவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
சாகர காரியவசத்தின் அறிக்கையைத் தாம் நிராகரிப்பதாக பெரமுனவின் பலர் கருத்து வெளியிட்டுள்ள அதேவேளை இவ்வறிக்கையினை வெளிநாட்டில் உள்ள ஒருவரின் தேவைக்காக சாகர வெளியிட்டதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment