நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபைக்குச் சொந்தமான இயந்திரமொன்றைத் திருடி பழைய இரும்பாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொலன்னாவ நகர சபையின் உறுப்பினர்கள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மீதொட்டமுல்ல பகுதி களஞ்சியசாலையொன்றில் வைக்கப்பட்டிருந்த இயந்திரத்தையே குறித்த நபர்கள் திருடி விற்பனை செய்திருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றதன் பின்னணியில் இக்கைதுகள் இடம்பெற்றதாகவும் இயந்திரத்தை கொள்வனவு செய்த நபர் மற்றும் அதனை அங்கிருந்து கொண்டு செல்வதில் பங்களித்தவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment