அமைச்சரவை என்று ஒன்றிருக்கும் போது கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான குழுவை இராணுவ தளபதி தலைமை தாங்குவது குறித்து தனது நாடாளுமன்ற உரையில் விசனம் வெளியிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் ஊடாக இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ரணில், இராணுவ தளபதியென்பவர் இராணுவத்திற்கு தலைமை தாங்குபவரே தவிர நாட்டின் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அனுமதிக்கப்பட முடியாதது என தெரிவிக்கிறார். நாட்டின் பொருளாதார மாநாட்டிலும் இராணுவ தளபதி உரையாற்றுவது நாடு இராணுவமயப்பட்டிருப்பதையே காட்டுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம், அரசின் சிவில் நிர்வாகத்தினை கொண்டு நடாத்த வேண்டியது அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளேயன்றி இராணுவம் அல்ல எனவும் நாட்டின் நிர்வாகத்தினை அரசாங்கம் மீளவும் பொறுப்பெடுக்க வேண்டும் எனவும் ரணில் காட்டமாக தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் வாதிக்க நேரம் ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment