கடந்த 12 வருடங்களாக இஸ்ரேலிய பிரதமராக இருந்து தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் தேவை வரும் போதெல்லாம் பலஸ்தீனம் மீது கொடூர தாக்குதல்களை நடாத்தி வந்த நெதன்யாஹுவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
முக்கிய எதிர்க்கட்சிகள் மூன்று இதில் பங்கேற்றுள்ளதுடன் பிரதமர் பதவிக்கான காலப் பங்கீடு குறித்தும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பிரதான எதிர்க்கட்சிகள் முதலில் ஓகஸ்ட் 2023 வரையான காலப்பகுதி வரையிலும் பின்னர் அதிலிருந்து எஞ்சியிருக்கும் காலப்பகுதியிலும் ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும்.
எனினும், இக்கூட்டணியின் நாடாளுமன்ற பெரும்பான்மை நிரூபிக்கப்படாதவிடத்து தேர்தல் ஒன்று அவசியப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment