வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர் தனிமைப்படுதல் தொடர்பிலான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது சுகாதார அமைச்சு.
இதனடிப்படையில் இரு தடுப்பூசிகளையும் ஏலவே பெற்றுள்ள இலங்கைப் பிரஜைகள் மற்றும் இலங்கைக் குடியுரிமையுள்ள இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் நேரடியாக தமது வீடுகளிலேயே 14 தினங்கள் தனிமைப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறில்லாதவர்கள் 14 நாட்கள் முகாம்களில் அல்லது ஹோட்டல்களில் தனிமைப்பட வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியா - வியட்நாம் - தென்னாபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளிலிருந்து வரும் இலங்கையர் கட்டாயம் முகாம்களில் அல்லது ஹோட்டல்களில் தனிமைப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment