பொலிஸ் உதவியுடன் கடத்தி, அச்சுறுத்தியே தன்னிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் அபே ஜன பல கட்சியின் விமலதிஸ்ஸ தேரர்.
குறித்த கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தனதாக்கிக் கொண்ட விமலதிஸ்ஸ தேரர், தலைமறைவாக இருந்த நிலையில் டி.ஐ.ஜி தேசபந்து தென்னகோனினால் அச்சுறுத்தப்பட்டு, வற்புறுத்தப்பட்டதன் பின்னணியிலேயே தாம் அத்துராலியே ரதன தேரரின் நியமனத்தை ஏற்றுக் கொள்ள நேர்ந்ததாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், அத்துராலியே ரதன தேரர் ஜுலை 5ம் திகதி பதவி துறக்க வேண்டும் என ஞானசார தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment