நாடு திரும்பியுள்ள பசில் ராஜபக்ச ஜுலை முதல் வாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதோடு அவர் பொருளாதாரத்துடன் தொடர்புடைய அமைச்சுப் பதவியொன்றையும் பெற்றுக் கொள்வார் என பெரமுனவின் பசில் அணியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பசில் அமைச்சுப் பதவியை ஏற்றதும் எரிபொருள் விலை ஆகக்குறைந்தது 5 ரூபாவால் குறையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச சிறந்த அமைப்பாளர் ஆனாலும் அவர் அமைச்சரில்லையென்பதால் அவரால் எதுவும் செய்ய முடியாது என வியத்மக ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் நிலையிலேயே இவ்வாறு நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment