அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டுவரப் போவதாக தெரிவிக்கிறது பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய.
தனது அமைச்சு அதிகாரத்தை அரசியல் நலனுக்காகப் பயன்படுத்தி மக்களை தவறான வழிக்குக் கொண்டு செல்ல முயல்வதாக அவர் மீது குற்றஞ்சுமத்தி இந்நம்பிக்கையில்லா பிரேரணை மிக விரைவில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே தெரிவிக்கிறார்.
இதற்கான கையொப்பம் திரட்டும் பணி இன்றே ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment