முதியோர் இல்லமொன்றில் குடியிருந்த பிக்கு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது..
மனநலம் பாதிக்கப்பட்ட முதியோர் காப்பகம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, 73 வயது மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரே இவ்வாறு பிக்குவை அடித்துக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரைக் கைது செய்துள்ள பமுனுகம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment