நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரே தான் தடுப்பூசி பெற்றுக் கொள்ளப் போவதாக தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
முன்னரே தடுப்பூசியைப் பெறாத காரணத்தினாலேயே தான் கொரோனா தொற்றுக்குள்ளானதாகவும் தெரிவிக்கும் அவர், தொடர்ந்தும் தன் நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லையென்று தெரிவிக்கிறார்.
மக்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல், உணவில்லாமலும் இன்னல் படும் இச்சூழ்நிலையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முன்னுரிமை வழங்க விரும்பவில்லையென அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment