இஸ்ரேலில் 12 வருட காலமாக ஆட்சியதிகாரத்தில் இருந்த பென்ஜமின் நெதன்யாஹுவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்றில் மேலதிக வாக்கினைப் பெற்று எதிர்க்கட்சிகளின் கூட்டணி தற்போது பதவியேற்றுள்ளது. இப்பின்னணியில் நப்தாலி பென்ட் தற்போது பிரதமராக பதவியேற்றுள்ளார். எனினும், 2023 செப்டம்பரில் பிரதமர் பதவியை கூட்டணிக் கட்சித் தலைவரிடம் அவர் ஒப்படைக்கவுள்ளார்.
கடந்த இரு வருடங்களில் நான்கு தடவைகள் தேர்தலை நடாத்தியுள்ள இஸ்ரேல், அவ்வப்போது 'தேசிய பாதுகாப்பு' எனும் போர்வையில் நெதன்யாஹுவின் ஆட்சிக் காலத்தில் பலஸ்தீனம் மீது வலிந்து தாக்குதல்களை நடாத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment