ரதன தேரர் இராஜினாமா செய்ததும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதற்கு ஞானசார காத்திருக்கின்ற நிலையில், அவ்வாறு எந்த எண்ணமும் தனக்கில்லையென பதிலளித்துள்ளார் அத்துராலியே ரதன தேரர்.
நேற்றைய தினம் அபே ஜன பல கட்சி இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டு, ஜுலை 5ம் திகதியளவில் ரதன தேரர் இராஜினாமா செய்வார் என தெரிவித்திருந்தது. எனினும், அதனை நிராகரித்துள்ள ரதன தேரர், ஐந்து வருடங்களும் தாம் தொடரப் போவதாகவும் எம்.பி பதவியை விட்டுக்கொடுக்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக ஆட்கடத்தல், அடிதடி, பொலிஸ் தேடல் என பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment