சம்மாந்துரையைச் சேர்ந்த அஷ்ஷைக் எம்.ஐ. அப்துல் காதர் ஹஸ்ரத் அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நாட்டு மக்களுக்கு பெரும் சேவை செய்த ஹஸ்ரத் அவர்கள் இன்று அதிகாலை வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாக் குழு உறுப்பினராக மிக நீண்ட காலம் சிறப்பாக சேவையாற்றியுள்ளதோடு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – சம்மாந்துரை பிரதேசக் கிளையின் தலைவராகவும், சம்மாந்துரை பைத்துஸ் ஸகாத் அமைப்பின் தலைவராகவும் பல காலங்கள் சேவையாற்றியுள்ளார்கள். மேலும், அவர்கள் சம்மாந்துரை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதி அதிபராகவும், பல வருடங்கள் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் சேவையாற்றி பலநூறு ஆலிம்கள் உருவாக்கப்படுவதற்கு காரணமாக அமைந்ததோடு, கல்விப் பணிக்காகவும், தீனின் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை கழித்துள்ளார்கள். இதன் மூலம் மார்க்கத்திற்கும், இந்நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்குவதற்கும் இவர் செய்த பங்களிப்பு பாரியதொன்றாகும்.
இவ்வேளேயில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் ஃபத்வாக் குழு அடங்களாக அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, தவறுகளை மன்னித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
No comments:
Post a Comment