7ம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலான பிரயாண கட்டுப்பாடுகள் நீக்கப்படினும் கூட அதன் பின்னரும் தேசிய அடையாள அட்டையின் இலக்க அடிப்படையில் வீட்டுக்கு ஒருவர் என்ற ரீதியிலேயே வெளியே செல்வதற்கான அனுமதியுள்ளதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.
எனினும், தொழிலுக்காக செல்வோருக்கு அனுமதியிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளின் பிரதிபலனை 10ம் திகதிக்குப் பின்னர் அவதானிக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக தினசரி 2500க்கு அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment