இலங்கையில் மேலும் 55 கொரோனா மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன. 32 ஆண்கள் மற்றும் 23 பெண்கள் உள்ளடங்கலான நேற்றைய மரண எண்ணிக்கையே இதுவென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதில் 13 பேர் தவிர, ஏனையோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.
வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதிப் பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றமையும் வீடுகளில் அதிக மரணங்கள் நிகழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment