பாகிஸ்தான்: ரயில் விபத்தில் 30 பேர் மரணம் - sonakar.com

Post Top Ad

Monday, 7 June 2021

பாகிஸ்தான்: ரயில் விபத்தில் 30 பேர் மரணம்

 


பயணிகளை ஏற்றிச் சென்ற இரு ரயில்கள் மோதியதன் பின்னணியில் 30 பேர் உயிரிழந்து பலர் காயமுற்றுள்ள சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.


கராச்சியிலிருந்து பயணித்த ரயில் தடம் புரண்ட நிலையில் மறு திசையில் வந்த ரயிலுடன் மோதியதனால் விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிந்த் பிராந்தியத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ள அதேவேளை, பாகிஸ்தானில் தொடர்ச்சியான ரயில் விபத்துகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment