இலங்கையில் கொரோனா சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் அரசின் செயற்பாடுகளுக்கு இதுவரை 286 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
பொது மக்கள் நலன், உதவித் திட்டங்கள் மற்றும் அனைத்து வகையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் இதில் உள்ளடக்கம் எனவும் 5000 ரூபா கொடுப்பனவுக்காக மாத்திரம் 130 பில்லியன் ரூபா செலவாகியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இது வரை 40 லட்சம் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக கெஹலிய தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment