260 மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த.
இந்த கோரிக்கையை முன் வைத்து மஹர மற்றும் வெலிகடையில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாகவும் தண்டனைக் குறைப்பு அறிவிக்கப்படும் எனவும் லொஹான் விளக்கமளித்துள்ளார்.
ஏலவே 10 வருடங்களை சிறையில் கழித்துள்ள கைதிகளே இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுவர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment