நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் பின்னணியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
மண் சரிவு மற்றும் வெள்ளத்தினால் இவ்வாறு மரணங்கள் நிகழ்ந்துள்ள அதேவேளை, மேலும் ஒரு நபர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐவர் காயமுற்றுள்ளதுடன் 10 மாவட்டங்களில் 176,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment