துறைமுக நகரம் ஊடாக இலங்கை 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை பெற்றுக்கொள்ளும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
இலங்கைக்கு முதலீட்டாளர்களைக் கவரும் நோக்கில் தற்போது நடைபெற்று வரும் முதலீட்டாளர் மாநாட்டின் இரண்டாவது நாளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஐந்து வருட காலப்பகுதியி 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை, நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் தொடரும் என பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment