இன்று மதியம் வெளியிடப்பட்ட 12ம் திகதிக்கான கொரோனா மரணங்கள் 67 மற்றும் நேற்றைய (13) தினத்துக்கான 57 மரணங்களுமாக மொத்தமாக 124 மரணங்கள் புதிதாக பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 2260 ஆக உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக வெளியிடப்படும் மரணங்கள் பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் இடம்பெற்ற மரணங்களாக இருப்பதுடன் அவை தினசரி எண்ணிக்கையில் பகிரப்பட்டு வருகின்றது.
இதேவேளை, 2259 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமையும் 33255 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment