1.21 கிலோ கிராம் ஹெரோயினுடன் 25 வயது பெண்ணொருவரை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
10 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த தொகை ஹொரோயினை கையிருப்பில் வைத்திருந்த நிலையில் இக்கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் மோதர பகுதியைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
No comments:
Post a Comment