அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்களை வீடுகளிலேயே தங்க வைப்பதற்கான அரசின் தீர்மானம் தொடர்பில் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு தொற்றாளர்கள் வீடுகளிலேயே தங்க வைக்கப்படுவதனால் மரண எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்து வருகின்ற அதேவேளை வைத்தியசாலைகளில் இடம் மற்றும் வசதிப் பற்றாக்குறை நிலவி வருகின்றமையும் தினசரி 2000க்கும் அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment