கடந்த சில நாட்களாக தேங்கியிருந்த பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகள் நேற்று ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டதனாலேயே நேற்றைய தினம் 2600க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியிருந்ததாக சுகாதார அமைச்சு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தினசரி 15000 பி.சி.ஆர் பரிசோதனைகளே நடாத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 20,000மாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இதன் முதல் கட்டத்தில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தற்சயம், 20642 பேர் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment