திங்கள் 17ம் திகதி முதல் தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கங்கள் அடிப்படையிலேயே வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கும் விதி முறை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
தற்சமயம் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு போன்ற சூழ்நிலை உணரப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்ற போதிலும் பல இடங்களில் மக்கள் நடமாட்டம் குறித்து பொலிசார் எச்சரித்துள்ளனர்.
இப்பின்னணியில் 31ம் திகதி வரை தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் அடிப்படையிலேயே வீட்டை விட்டு வெளியேற முடியும் எனவும் விதியை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment