இலங்கை - இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சினேகபூர்வமான கிரிக்கட் ஆட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது லண்டனில் இயங்கும் இலங்கைத் தூதரகம்.
அண்மையில் இங்கிலாந்து நாடாளுமன்றின் சபாநாயகரை சந்தித்த ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கைத் தூதர் இது குறித்து கலந்துரையாடியுள்ளதுடன் இரு நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பரஸ்பரம் விஜயங்களை மேற்கொள்வதற்கும் சந்தித்து உரையாடிக் கொள்வதற்கும் சந்தர்ப்பத்தை உருவாக்குவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதன் போதே, இரு நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே சினேகபூர்வமான கிரிக்கட்ட ஆட்டம் ஒன்றை நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment