செங்கலடிப் பகுதியைச் சேர்ந்த தியேட்டர் மோகன் என அறியப்படும் நவநீதப்பிள்ளை மோகன் எனும் 56 வயது நபரை விடுதலைப் புலிகள் அமைப்பை பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டில் பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
செங்கலடி, செல்லம் தியேட்டர் உரிமையாளரான இவர், மட்டக்களப்பு, ஏறாவூர் மற்றும் கரடியனாறு பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிமித்தம் குறித்த நபர் தேடப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த நபரின் டிஜிட்டல் சாதனங்களையும் தாம் கைப்பற்றியிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றமையும் குறித்த நபர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment