ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நிறைவு செய்யாத காரணத்தினால் யாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியாது போனதாக பதவி விலகப் போகும் சட்டமா அதிபர் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இச்சம்பவத்தின் பின்னணியில் சுமார் 702 பேர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் ஐவருக்கு எதிரான விசாரணையே முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனையோரின் விசாரணை எந்த அளவில் இருக்கிறதென்பதிலும் தெளிவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில் இது குறித்து சி.ஐ.டியினரிடம் அறிக்கை கோரியுள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர. தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்புக்கு சிக்கல் இருப்பதாக இவர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment