பயணிகள் பற்றாக்குறை காரணமாக அனைத்து பேருந்து மற்றும் ரயில்களும் தமது சேவைகளை மட்டுப்படுத்தத் தீர்மானித்துள்ளன.
தனியார் பேருந்து சேவைகள் வழமையை விட 75 வீதம் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பயணிகளின் அளவைப் பொறுத்தே தமது சேவைகளை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நிலைமையை தீர ஆராய்ந்து ரயில் சேவைகள் எதிர்வரும் வாரம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களமும் தெரிவித்துள்ளமையும் பெரும்பாலானவர்கள் தமது சொந்த போக்குவரத்து முறைமைகளையே பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment