தனது பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் பொலிஸ் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதன் பின்னணியில் தாமும் தமது குடும்பமும் தனிமைப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
தமது குடும்பத்தாருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை பெறுபேறுகள் 'நெகடிவாக' அமைந்திருப்பினும் கூட, குடும்பத்துடன் வீட்டில் தனிமைப்பட்டுள்ளதாகவும் இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 27ம் திகதிக்குப் பின் தன்னையோ அல்லது தனது அலுவலக பணியாளர்களையோ சந்தித்தவர்கள் இருப்பின் அவர்களையும் தனிமைப்படுமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment