சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பதவியை விட்டு விலக வேண்டும் என எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது அரச மருத்துவர்கள் அமைப்பான GMOF (Government Medical Officers Forum) .
16 மாதங்களாக சுகாதார அமைச்சராக பதவி வகித்தும் கொரோனா சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதில் சரியான தலைமைத்துவத்தையோ வழி காட்டலையோ ஒத்துழைப்பையோ அவர் தரவில்லையென குறித்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
விஞ்ஞானத்துக்கு பதிலாக புராண நம்பிக்கையை முற்படுத்தி மக்களை பிழையான பாதைக்கு அழைத்துச் சென்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள குறித்த அமைப்பு பவித்ராவை பதவி விலகுமாறு கோரியுள்ளது.
No comments:
Post a Comment