தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலில்லை: பா.செயலாளர் - sonakar.com

Post Top Ad

Thursday, 27 May 2021

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலில்லை: பா.செயலாளர்

 



தேசிய பாதுகாப்பு குறித்த வீண் அச்சம் எதுவும் அவசியமில்லையென தெரிவிக்கிறார் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன.


இலங்கைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க தமது பிரஜைகளுக்கு வெளியிட்டிருந்த தடையானது பயங்கரவாத அச்சுறுத்தலையும் உள்ளடக்கிய வகைக்குள் அடங்குவதனால் இலங்கையில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்தே அவர் இவ்வாறு தெரிவிக்கிறார்.


கொரோனா சூழ்நிலையைக் கருத்திற் கொண்டே இலங்கைக்கான பிரயாணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment