தேடப்பட்டு வந்த பாதாள உலக பேர்வழி ஊரு ஜவா (மம்புலகே தினத் மெலன் மம்புல), நவகமுவ பகுதியில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று கைது செய்யப்பட்டிருந்த குறித்த நபரை இன்று மீண்டும் அப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றின் போது இலக்காகி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல கொலை, கொள்ளை மற்றும் பணம் பறிப்பு சம்பவங்களில் 27 வயதான குறித்த நபர் தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment