பிலியந்தல பகுதியில் பெண் அதிகாரி மீது தாக்குதல் - sonakar.com

Post Top Ad

Monday, 17 May 2021

பிலியந்தல பகுதியில் பெண் அதிகாரி மீது தாக்குதல்

 


கெஸ்பேவ பிரதேச செயலகத்தில் பணி புரியும் பெண் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.


தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோக நடவடிக்கையின் பின்னர் வீடு திரும்புகையிலேயே குறித்த அதிகாரி தாக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், சந்தேக நபரை அடையாளம் கண்டிருப்பதாகவும் இவ்வாறு அரச அதிகாரிகளைத் தாக்குபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையான தண்டனை வழங்கும் எனவும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment