முன்னாள் ஆளுனர் அசாத் சாலிக்கு ஏதுமானால் அதற்கு அரசே முழுப்பொறுப்பு என விசனம் வெளியிட்டுள்ளார் அவரது சகோதரர் ரியாஸ் சாலி.
விசேட குற்றவியல் விசாரணைப்பிரிவினரால் தடுதது வைக்கப்பட்டுள்ள அசாத் சாலிக்கு நேற்றைய தினம் மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் தகவலை இன்று காலையிலேயே சி.ஐ.டியினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை 6.30 மணியளவிலேயே மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையெனவும் தகுந்த காரணம் எதுவுமின்றி தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அசாத் சாலிக்கு ஏதுமானால் அரசே முழுப் பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமையும் அனைவரும் அசாத்தின் நலத்திற்காக பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment