இன்றிரவு 11 மணி முதல் திங்கள் காலை 4 மணி வரையிலான காலப்பகுதியில் மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தேசிய 'லொக்டவுன்' பற்றி இன்னும் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இவ்வார இறுதியில் முழுமையாக வர்த்தக நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் தேசிய அடையாள அட்டை இலக்க அடிப்படையில் வீடுகளை விட்டு வெளியேறுவதையும் முற்றாகத் தவிர்க்குமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.
தினசரி 2000க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் வைத்தியசாலைகளில் இடவசதிக் குறைபாடு நிலவுகின்றமையும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment