தன்னால் 'டோக்கன்' வழங்கப்படுபவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்க வேண்டும் என அடாவடியில் ஈடுபட்டு கைதாகியுள்ள மொரட்டுவ மேயர் லால் பெர்னான்டோவின் செயற்பாட்டுக்கு ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரியுள்ளார் நாமல் ராஜபக்ச.
இவ்வாறான நடவடிக்கைகள், அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயற்பாடுகள் எனவும் 'அசிங்கமானவை' எனவும் ஜனாதிபதி நேற்றைய தினம் விசனம் வெளியிட்டிருந்த நிலையில், அது தவறுதலாக நடந்த விடயம் எனவும் அதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் பதிலளித்துள்ளார் நாமல் ராஜபக்ச.
சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த மேயர், தனது பரிந்துரையுடன் வந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கவில்லையென வீதியில் அடாவடியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment