ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் நீண்ட நாள் வீற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, கட்சி படுதோல்வியடைந்த பின்னரும் இன்னும் விலகாத நிலையில், கொழும்பில் உள்ள அவருக்குச் சொந்தமான வீடொன்று குறித்து கட்சி மட்டத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
அவ்வீட்டினை தான் கல்வி கற்ற பாடசாலையான றோயல் கல்லூரிக்கு ரணில் எழுதி வைத்திருப்பதாகவும் அவரது மரணத்தின் பின்னர் அந்த வீடு பாடசாலைக்கு சேரும் எனவும் தகவல்கள் வெளியானதையடுத்து இது குறித்து ரணிலிடம் கட்சி சந்திப்பின் போது கேள்வியெழுப்பப் பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ரணில், அது பற்றி யோசிக்க 'இன்னும்' காலம் இருக்கிறது என தனது வழமையான பாணியில் பதில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment