யுத்த நிறைவுக்குத் தானும் தான் பங்காளியெனவும் சரத் பொன்சேகா வீரனாக முயற்சிக்கத் தேவையில்லையெனவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர.
இன்றைய தினம் நாடாளுமன்றில் இருவருக்குமிடையில் சூடான வாதப் பிரதிவாதம் இடம்பெற்றிருந்தது. இதன் போது, நடக்காத யுத்த குற்றங்களை சரத் பொன்சேகா நடந்ததாகக் கூற வருவதாக தெரிவித்த சரத் வீரசேகர, யுத்தத்தை வெல்வதற்குப் பங்களித்த முக்கிய நபர்களுள் தானும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா வெளிநாட்டு 'பணத்திற்காக' பேசுவதாக சரத் வீரசேகர குற்றஞ்சுமத்தியிருந்தமையும் சரத் வீரசேகர வரலாறு தெரியாதவர் என பொன்சேகா தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment