மே மாதத்தில் சீன தடுப்பூசியைப் பெற்றவர்கள் நான்கு வாரங்கள் கழிந்து ஜுனில் தமது இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 8ம் திகதி முதல் இலங்கையில் சீன தடுப்பூசி பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டாவது தடுப்பூசியை வழங்க தயார் எனவும் முதலில் பெற்ற அதே இடங்களில் பயனாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார்.
சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் எதிர்பார்க்கப்படுவதாக அண்மையில் அமைச்சர் ஜோன்ஸ்டன் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment