நாட்டில் பெய்து வரும் மழையினால் பல இடங்களில் நீர்த் தேக்கம், மண் சரிவு போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
காலி மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வாறு சிறிய அளவிலான வெள்ள சூழ்நிலை உருவாகியுள்ள அதேவேளை வரகாபொல பகுதிகளில் மண் சரிவினால் வீடுகள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
மாயின்னொலுவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த நான்கு குடும்பங்கள் பாதுகாப்பு படையினர் உதவியோடு மீட்கப்பட்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment