பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஆளுனர் அசாத் சாலி தொடர்பிலான விசாரணைகளை விரைவாக முடிக்குமாறு குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
அசாத் சாலி தரப்பினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை வழக்கு இன்றைய தினம் பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் விசாரணைகளை இன்னும் நிறைவு செய்யவில்லையென சி.ஐ.டியினர் மீண்டும் தெரிவித்திருந்தனர்.
மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அசாத் சாலியை வேறு வார்டுக்கு மாற்றி, தேவையான சிகிச்சை வசதிகளை செய்து தருமாறும் அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம் எதிர்வரும் ஜுன் 2ம் திகதிக்குள் விசாரணைகளை நிறைவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வழக்கின் விசாரணை ஜுன் 2 தொடரவுள்ளது.
பாயிஸ் முஸ்தபா, கௌரி தவராசா, ருஷ்தி ஹபீப், மைத்ரி குணரத்ன, பைசர் முஸ்தபா, என்.எம். ஷஹீத், பாயிசா முஸ்தபா, புலஸ்தி ரூபசிங்க உட்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு அசாத் சார்பில் ஆஜராகியிருந்த அதேவேளை அசாத்தின் உடல் நலம் குறித்துத் தாம் பெரும் கவலை கொண்டுள்ளதாக குடும்பத்தினர் சோனகர்.கொம்முக்கு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment