மறு அறிவித்தல் வரை அனைத்து பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், முன் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளார் கல்வியமைச்சர்.
தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் பாதுகாப்பு நிமித்தம் சுகாதார மற்றும் கல்வியதிகாரிகள் இணைந்து இம்முடிவை எட்டியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்மைய தினங்களாக தினசரி 1500க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றமையும் அது 2000 தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment