கொரோனா தொற்று தீவிரமடைந்துள் நிலையில் அவசர சிகிச்சை நிலையங்கள், தேவையான உபகரணங்கள் மற்றும் ஒக்சிஜன் போன்றவற்றை சுகாதாரத்துறை பெற்றுக்கொள்வதற்கு நாட்டின் தனவந்தர்கள், கொடை வள்ளல்கள் உதவ வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே.
நாட்டின் சூழ்நிலை மோசமாக இருக்கும் போது வெளிநாடுகளிலிருந்து ஹெலிகப்டர் கொள்வனவை நிறுத்தி அந்நிதியை மக்களுக்காக செலவு செய்யுமாறு அண்மையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், வெளிநாட்டு நிதிகள் ஒதுக்கப்படும் விடயத்துக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட முடியும் எனவும் ஹெலிகப்டர் கொள்வனவைக் கை விட முடியாது எனவும் லன்சா பதிலளித்திருந்தார்.
கடந்த வருடம் கோடிக்கணக்கான ரூபா கொரோனா நிதி வசூலிக்கப்பட்டிருந்தமையும் இவ்வருடம் தற்போது கொரோனா தொற்று தீவிரமடைந்து தினசரி 2000க்கு மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் பதிவாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment