பலஸ்தீனம் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் வெகுவாக அதிகரிதுள்ள நிலையில் அது முழு அளவிலான யுத்தமாக வெடிக்கும் என ஐ.நா உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
கிழக்கு ஜெருசலத்திலிருந்து அரபு குடியேற்றங்களை அகற்றும் நோக்கில் பலாத்காரமாக நில அபகரிப்பு நடந்து வந்த நிலையில் அதற்கெதிரான மக்கள் போராட்டம் வெடித்திருந்தது. இதனைத் தடுப்பதற்கு இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு மற்றும் வான் தாக்குதல் ஆரம்பித்திருந்த நிலையில் பலஸ்தீன போராட்ட இயக்கங்கள் இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் நடாத்தி வருகின்றன.
இதுவரை 1000க்கணக்கான ஏவுகணைகள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இஸ்ரேல், காஸாவில் சிவில் கட்டிடங்களைத் தகர்த்து 50க்கு மேற்பட்டோரைக் கொன்று குவித்துள்ளது. ஹமாஸ் ரொக்கட் தாக்குதலால் ஆறு இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாடு தெரிவிக்கின்றமையும் இரு தரப்பும் தொடர்ச்சியான தாக்குதல்களை அதிகரித்துள்ளமையும் 2014ன் பின்னர் உக்கிரமான சண்டைக்கான அத்திரவாரமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment