பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதல்களை நடாத்தி வரும் நிலையில் நிலைமையை சீராக்க முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தும் நிமித்தம் அமெரிக்க பிரதிநிதி இஸ்ரேல் சென்றுள்ளார்.
பலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் ஐ.நா அமைப்புகளுடன் பேசி தற்போது நிலவி வரும் பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடப் போவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஜெருசலத்தின் அரபுக் குடியேற்றப் பகுதிகளை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்ததன் பின்னணியில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தினை அடக்க அல்-அக்சா பகுதியில் நடாத்தப்பட்ட பொலிசாரின் தாக்குதல்களினால் நிலைமை தீவிரமடைந்திருந்தது. இந்நிலையில், பலஸ்தீனர்கள் கொலைக்கு ஹமாஸ் தரப்பு பதில் தாக்குதல் நடாத்தியிருந்ததுடன் இஸ்ரேல் காஸா பகுதியில் தீவிர வான் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.
சம்பவத்தினால் ஆகக்குறைந்தது 70 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 6 இஸ்ரேலியர்கள் ரொக்கட் தாக்குதல்களில் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2014ம் ஆண்டின் பின்னர் பிரதேசத்தில் மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் முழு அளவிலான யுத்தம் வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment