ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நேற்றிரவு அமெரிக்கா பயணித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
விரைவில் அவர் நாடு திரும்புவார் என நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியுற்றதும் அதே நாள் அமெரிக்கா சென்றிருந்த பசில், பின்னர் நாடு திரும்பி பெரமுன கட்சியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்தார்.
எனினும், அண்மைக் காலமாக பசில் - வியத்மக மற்றும் விமல் - கம்மன்பில கூட்டணிகளுக்கிடையில் முரண்பாடுகள் வலுத்துள்ளமையும் பசில் அடுத்த ஜனாதிபதியாவதற்கு முனைவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment