எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் மொட்டு சின்னத்தில் போட்டியிடாது பாரம்பரிய 'கை' சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
சு.க - பெரமுன இடையே நிலவி வரும் முறுகலின் பின்னணியில் பசில் ராஜபக்சவை சந்தித்து சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இந்நிலையிலேயே இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக சு.க தரப்பு தெரிவிக்கிறது.
இதேவேளை, சுதந்திரக் கட்சியினர் வேறு எந்தக் கட்சியுடனும் 'கூட்டணி' அமைக்காது எனவும் இதன் போது வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment