450 வருட காலமாக மேற்குலக நாடுகளின் காலனித்துவ நாடாக இருந்து 1948ல் சுதந்திரம் பெற்ற இலங்கை, தற்போது மீண்டும் காலனித்துவ நாடாகி மாறிவிட்டதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாகவே துறைமுக நகரம் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், நாட்டின் வளங்களை வேறு நாடுகளிடம் ஒப்படைப்பது சட்டவிரோதம் எனவும் தெரிவிக்கிறார்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் அண்மையில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment